Published : 14 May 2015 08:08 AM
Last Updated : 14 May 2015 08:08 AM

மனித உரிமை ஆணைய தற்காலிக தலைவர் சிரியக் ஜோசப்

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தற்காலிக தலைவராக நீதிபதி சிரியக் ஜோசப் நேற்று பொறுப்பேற்றார்.

உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான இவர் 2013-ம் ஆண்டு மே 27-ம் தேதி ஆணையத்தின் உறுப்பினராக சேர்ந்தார்.

இதன் தலைவராக இருந்த கே.ஜி.பாலகிருஷ்ணன் பதவிக் காலம் இந்த மாதம் 11-ம் தேதியுடன் முடிந்தது. புதிய தலைவர் நியமிக் கப்படும் வரை அந்த பொறுப்பை ஜோசப் ஏற்பார். இதற்கான ஒப்பு தலை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கியுள்ளார்.

தனது 5 ஆண்டு பதவிக்காலத்தில் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார் பாலகிருஷ்ணன்.

பாலகிருஷ்ணன் பதவிக்காலத் தில் ஆணையம் சாதனை அளவாக 4 லட்சத்து 93 ஆயிரத்து 445 வழக்குகளை பதிவு செய்தது.இவற்றில் தானாக முன்வந்து பதிவு செய்த 599 வழக்குகளும் அடங்கும். 4 லட்சத்து 64 ஆயிரத்து 79 வழக்குகளை தீர்த்துவைத்தது.

2242 வழக்குகளில் 68 கோடியே 97 லட்சத்து 70 ஆயிரத்து 172 ரூபாயை நிவாரணமாக வழங்க பரிந்துரைத்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x