Published : 17 May 2015 09:41 AM
Last Updated : 17 May 2015 09:41 AM

சீனப் பிரதமருடன் மோடி: உலகின் வல்லமை வாய்ந்த செல்ஃபி - ஃபோர்ப்ஸ் பத்திரிகை புகழாரம்

சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்கு சீனப் பிரதமர் லீ கேகியாங் உடன் எடுத்துக்கொண்ட செல்ஃபியை ‘உலகின் வல்லமை வாய்ந்த செல்ஃபி' என்று பிரபல ‘ஃபோர்ப்ஸ்' இதழ் புகழ்ந்துள்ளது.

தனது சுற்றுப் பயணத்தின்போது மோடி, சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள ‘சொர்க்கக் கோயில்' அமைந்திருக்கும் இடத்துக்குச் சென்றார். அங்கு சீன மாணவர்களின் 'தாய் சீ' பயிற்சிகளைக் கண்டுகளித்தார். அப்போது அவருடன் லீ கேகியாங்கும் உடனிருந்தார். உடனே அவரைத் தன் அருகில் அழைத்து மோடி செல்ஃபி எடுத்துக்கொண்டார். அந்தப் புகைப்படத்தை 'இது செல்ஃபி நேரம்! மிக்க நன்றி பிரதமர் லீ' என்ற வாசகத்துடன் தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் மோடி பகிர்ந்துகொண்டார்.

பேஸ்புக்கில் இந்தப் புகைப்படம் பதிவேற்றப்பட்ட 6 மணி நேரத்துக்குள் சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமானவர்களால் 'லைக்' செய்யப்பட்டுள்ளது. அவர்களில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுகர்பெர்க்கும் ஒருவர் ஆவார். ட்விட்டரில் இந்தப்படம் 3 ஆயிரத்துக்கும் அதிகமான முறை ‘ரீ ட்வீட்' செய்யப்பட்டுள்ளது.

இந்தப் புகைப்படம் குறித்து ‘ஃபோர்ப்ஸ்' இதழ் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில், 'இரண்டு வல்லவர்களை ஒருங்கே கொண்டிருக்கும் வல்லமை வாய்ந்த செல்ஃபி' என்று கூறியுள்ளது.

இந்தப் புகைப்படத்தைப் பார்த்த பெரும்பாலான சீனர்கள் தங்கள் பிரதமருக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர். மற்றும் பலர், இந்திய அரசியல் தலைவர்களைப் போல ஏன் சீனத் தலைவர்கள் சமூக வலைத்தளங்களில் ஈடுபாடு காட்டுவதில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x