Last Updated : 30 May, 2015 03:32 PM

 

Published : 30 May 2015 03:32 PM
Last Updated : 30 May 2015 03:32 PM

மாகி நூடுல்ஸ் ரசாயன கலப்பு விவகாரம்: நெஸ்லே இந்தியா மீது உ.பி. வழக்கு

உத்தரப் பிரதேச அரசின் வழிகாட்டுதலின்படி, மாகி நூடுல்ஸின் தயாரிப்பு நிறுவனமான நெஸ்லே இந்தியா மீது அம்மாநில உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம் வழக்கு தொடர்கிறது.

வழக்கு தொடர்வதற்கான உத்தரவை அரசிடமிருந்து பெற்றுள்ளதாகவும் இன்று அல்லது வரும் வாரத்துக்குள் தொடர்புடைய நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்படும் என்று மாநில உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி வி.கே. பாண்டே தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பாக அவர் கூறும்போது, "உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை ஆணையர் பி.பி.சிங் நெஸ்டில் இந்தியா நிறுவனத்தின் மீது உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர அனுமதி அளித்துள்ளார்.

அதன்படி, ஹரோலியில் உள்ள நெஸ்லே நகல் கலன் தொழிற்சாலை, நெஸ்டில் இந்தியா லிமிட்டட், ஈஸி டே அங்காடி உள்ளிட்ட நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்பட உள்ளது" என்றார்.

பிரபல நூடுல்ஸ் தயாரிப்பு நிறுவனமான மாகி நூடுல்ஸ் பாக்கெட்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட எம்.எஸ்.ஜி., எனப்படும் மோனோசோடியம் குளூடாமேட் என்ற வேதிப் பொருள் அதிகம் கலக்கப்பட்டுள்ளது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆய்வை அடுத்து மாகியை தடைச் செய்ய உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிம் ஆகிய மாநிலங்கள் ஆலோசித்து வருகிறது.

இதனிடையே நூடுல்ஸ் ரசாயன கலப்பு குற்றச்சாட்டு தொடர்பாக நிறுவனம் அந்த ஒரு கருத்தையும் வெளியிடவில்லை.

மத்திய அரசு ஆலோசனை

இந்த விவகாரத்தை கூர்ந்து கவனிக்கும்படி மத்திய நுகர்வோர் விவகார அமைச்சுர் ராம் விலாஸ் பஸ்வான் உத்தரவிட்டுள்ளார். தேவைப்பட்டால் தேசிய நுகர்வோர் ஆணையம் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x