

ஜெயலலிதா விடுதலை செய்யப் பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்வது தொடர்பாக ஆலோ சித்து அடுத்த வாரம் முடிவு அறி விக்கப்படும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு மேல்முறை யீட்டு வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர். குமாரசாமி ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரையும் விடுதலை செய்தார். இந்த தீர்ப்பில் ஜெயலலிதா தரப்பு மற்றும் தனியார் நிறுவனங்கள் அபிராமப்புரம் இந்தியன் வங்கி யில் வாங்கிய கடன் தொடர்பான கூட்டுத்தொகை தவறாக இடம்பெற் றுள்ளது. அதனை சரியாக கணக் கிட்டால் ஜெயலலிதாவின் வருமானத்துக்கு அதிகமாக சொத்து மதிப்பு விகிதாச்சாரம் 20 சதவீதத்துக்கும் அதிகமாக வரும்.
ஜெயலலிதாவை நிரபராதி என விடுவிக்க நீதிபதி தெரிவித்துள்ள காரணமே பிழையாக இருப்பதால், இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி, தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையடுத்து அரசு வழக்கறிஞர் ஆச்சார்யாவிடம் முறையான பரிந்துரை கடிதம் அளிக்குமாறு கர்நாடக அரசின் சட்டத்துறை செயலர் சங்கப்பா கேட்டார். நீதிபதி குமாராசாமியின் தீர்ப்பு மேல்முறையீட்டுக்கு தகுதி யானது என ஆச்சார்யா கடிதம் எழுதினார்.
இந்நிலையில் கர்நாடக அரசின் முடிவு குறித்து முதல்வர் சித்தராமையா, நேற்று பெங்க ளூருவில் கூறியதாவது:
ஜெயலலிதா வழக்கில் வெளியாகியுள்ள தீர்ப்பு மிகவும் பரபரப்பாக பேசப்படுகிறது. இது போன்ற விவகாரத்தில் கர்நாடக அரசு அவசரமாக முடிவெடுக்க விரும்பவில்லை.
நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பு குறித்து ஆராயுமாறு சட்டத்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சட்டத் துறை அமைச்சர் டி.பி.ஜெயச் சந்திரா, சட்டத்துறை செயலர் சங்கப்பா, கர்நாடக அரசின் தலைமை வழக்கறிஞர், அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா ஆகியோர் இது தொடர்பாக ஆலோசித்து வருகின்றனர். ஒரு வாரத்துக்குள் முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதனிடையே சட்டத்துறை அமைச்சர் டி.பி.ஜெயச்சந்திரா கூறியபோது,'' ஒரு வழக்கில் அரசு தரப்பு தோல்வி அடைந்தால் அந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வது சாதாரணமான ஒன்று. அதேபோல இந்த வழக்கிலும் உரிய ஆய்வுகள் முடிந்து, அறிக்கை தயாரித்த பிறகு முடிவெடுக்கப்படும். முன்னதாக தீர்ப்பில் உள்ள சாதக, பாதக அம்சங்கள் ஆராயப்படும்'' என்றார்.