

பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள், குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து தங்களது ராஜினாமா கடிதத்தை அளித்தனர்.
மக்களவைத் தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது.
இதையடுத்து, மன்மோகன் சிங் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கடைசி அமைச்சரவை கூட்டம் இன்று(சனிக்கிழமை) நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்திற்கு பின் பிரதமர் மன்மோகன் சிங்கும், அவரது அமைச்சரவை சகாக்கள் அனைவரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.
இதையடுத்து, ராஜினாமா கடிதத்தை, மன்மோகன் சிங் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் அளித்தார்.
முன்னதாக, பிரதமர் மன்மோகன் சிங்கை பாராட்டி அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.