

இந்தியா-வங்கதேசம் இடையே யான நில எல்லை வரையறை ஒப்பந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை செவ்வாய்க் கிழமை ஒப்புதல் அளித்தது. நீண்ட காலமாக தாமதமாகி வந்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இவ்விரு மசோதாக்களும் இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.
இந்நிலையில், “இந்த மசோ தாக்கள் மீது நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு உள்ளது. என்வே, நாளை வரை அனைவரும் நாடாளுமன்ற நட வடிக்கையில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கட்சி எம்பிக்களுக்கு பாஜக கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது” என தகவல்கள் கூறுகின்றன.
இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறும்போது, “மாநில அரசுகளுடன் ஆலோ சனை நடத்திய பிறகே ஜிஎஸ்டி மசோதா கொண்டுவரப்பட்டுள் ளது. இந்த மசோதாவை இந்த கூட்டத்தொடரிலேயே நிறைவேற்ற விரும்புகிறோம். நாட்டு நலன் கருதி இதற்கு அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஒத்துழைப்பு தர வேண்டும்” என்றார்.
டெல்லியில் நேற்று நடை பெற்ற பாஜக நாடாளுமன்ற உறுப் பினர்கள் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பேசும்போது, “ஜிஎஸ்டி மசோதா புரட்சிகரமான வரி சீர்திருத்தத் துக்கு வழிவகுக்கும். ஊழலை ஒழிப்பதுடன் வருவாய் இழப்பைத் தடுக்க இது உதவும். மேலும் பல்முனை வரி விதிப்பால் மக்கள் பாதிப்புக்குள்ளாவதைத் தடுக் கும்” என்றார்.