காஷ்மீரில் குண்டுவீச்சு 14 பேர் படுகாயம்

காஷ்மீரில் குண்டுவீச்சு 14 பேர் படுகாயம்
Updated on
1 min read

காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் நேற்று தீவிரவாதிகள் சந்தைப் பகுதியில் குண்டு வீசினர். இதில் இரண்டு சிறுமிகள் உட்பட 14 பேர் படுகாயம் அடைந்தனர்.

சோபியான் சந்தைப் பகுதியில் உள்ள காவல் நிலையம் ஒன்றுக்கு தீவிரவாதிகள் குறிவைத்து, வெடிகுண்டை வீசினர்.

ஆனால் இலக்கு தவறி, அருகிலிருந்த மக்கள் கூட்டத்தின் மீது அந்த குண்டு விழுந்ததாக, அப்பகுதி போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த குண்டுவீச்சில் 14 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in