

விலை கட்டுப்பாட்டின் கீழ் கூடுதல் மருந்துகளை இணைக்கும் விதத்தில் அத்தியாவசிய மருந்துகள் பட்டியலை மறு ஆய்வு செய்யும் பணி நடக்கிறது என மக்களவையில் மத்திய அரசு தெரிவித்தது.
இதுதொடர்பாக ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் அனந்த் குமார் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:
தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியலை மறு ஆய்வு செய்வதற்காக, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் ஒரு நிபுணர் குழுவை அமைத்துள்ளது.
இதுதொடர்பாக அரசு விரிவான ஆலோசனை நடத்தி வருகிறது. விரைவிலேயே பரிந்துரைகளின் அடிப்படையில் புதிய பட்டியில் வெளியிடப்படும். விலைக்கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படவுள்ள மருந்துகளின் அடிப்படையில் இப்பட்டியல் தயாரிக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.