

திரிணமூல் காங்கிரஸ் கட்சி 42 மக்களவைத் தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. இதில் 11 பேரே பெண்கள் இடம்பெற்றுள்ளனர். இடதுசாரி முன்னணி அறிவித்த வேட்பாளர் பட்டியலில் 6 பெண்கள் உள்ளனர்.
பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்றால் அதற்காக ஆதரவு தெரிவித்து உரக்க குரல் எழுப்புவதில் திரிணமூல் காங்கிரஸும் இடதுசாரிகளும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல.
பெண் அதிகாரம் பற்றி வாய் நிறைய பேசும் இந்த கட்சிகள், தாம் அறிவித்த வேட்பாளர் பட்டியலில் உரிய அளவுக்கு பெண்களுக்கு இடம் தரவில்லை என்பதுதான் உண்மை. இடதுசாரி முன்னணியை விட அதிக பெண் வேட்பாளர்களை திரிணமூல் காங்கிரஸ் அறிவித்தாலும் மகளிருக்கு 3ல் ஒரு பங்கு இடம் தர அது தவறிவிட்டது.
இது பற்றி கேட்டதற்கு அந்த கட்சியின் பொதுச்செயலர் முகுல் ராய் கூறியதாவது: இது ஒரு தொடர் நிகழ் வாகும். நிறைய
பெண்களை வேட்பாளர்களாக அறிவிப்பது என்பது நிதான மாக நிறைவேறும். பஞ்சாயத்து தேர்தலுக்கான வேட்பாளர்களில் 50 சதவீதம் பேர் பெண்கள் அறிவிக்கப்பட்டனர். மக்கள வைத் தேர்தலில் 11 பெண் வேட்பாளர்களுக்கு டிக்கெட் கொடுத்துள்ளோம் என்றார்.
மார்க்சிஸ்ட் கட்சி கருத்து
இந்த பட்டியலில் இன்னும் கூடுதலாக பெண் வேட்பாளர்களை அறிவித்திருக்க வேண்டும் என்பது சரியான வாதமே.
இருப்பினும் மாவட்ட, கிராம நிலையில் உள்ள கட்சி நிர்வாகிகள் இந்த மாற்றத்துக்கு இன்னும் தயாராக வில்லை என்று மார்க்சிஸ்ட் கட்சி மேலிடத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்னும் அதிக அளவில் பெண் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்ற யோசனையை மாவட்ட மற்றும் கிராம நிலையில் உள்ள நிர்வாகிகளிடம் சொல்லி புரிய வைக்க முடியவில்லை என்று மார்க்சிஸ்ட் மத்திய குழு உறுப்பினரான ரேகா கோஸ்வாமி தெரிவித்திருக்கிறார்.