

நாடு முழுவதும் செம்மரமும் சந்தன மரமும்தான் அதிகம் கடத்தப்படுகின்றன என்று மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் கேள்வி நேரத்தின்போது மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது: நாடு முழுவதும் விலைமதிப்புமிக்க மரங்கள் கடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக செம்மரமும் சந்தன மரமும் அதிகம் கடத்தப்படுகின்றன.
உத்தரப் பிரதேசத்தில் டீக்வுட் மரங்கள் நீர்நிலைகள் வழியாக கடத்தப்பட்டு வருகின்றன. வனப் பகுதிகளைப் பாதுகாப்பது மாநில அரசுகளின் கடமை. பல்வேறு மாநிலங்களில் வனத்துறை பாதுகாவலர்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மரங்கள் கடத்தலைத் தடுப்பது தொடர்பாக ஆக்கப்பூர்வமான யோசனைகளை வரவேற்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.