உரிய நடைமுறைகளை பூர்த்தி செய்த பிறகு கிலானியின் பாஸ்போர்ட் விண்ணப்பத்தை மத்திய அரசு பரிசீலனை செய்யும்: உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்

உரிய நடைமுறைகளை பூர்த்தி செய்த பிறகு கிலானியின் பாஸ்போர்ட் விண்ணப்பத்தை மத்திய அரசு பரிசீலனை செய்யும்: உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்
Updated on
1 min read

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் சையது அலிஷா கிலானியின் பாஸ்போர்ட் விண்ணப்பத்தை, உரிய நடைமுறைகளை அவர் பூர்த்திசெய்த பிறகு மத்திய அரசு பரிசீலிக்கும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

இதுகுறித்து அவர் டெல்லியில் நேற்று நிருபர் களிடம் கூறும்போது, “இந்த விண்ணப்பம் உரிய நடை முறைகள் பூர்த்தி செய்யப்பட்டு எங்களிடம் வருமானால் அதனை பரிசீலிக்கத் தயாராக உள்ளோம். பாஸ்போர்ட் வழங்க எங்களுக்கு ஆட்சேபனை ஏதுமில்லை” என்றார்.

வெளியுறவு அமைச்சகம் நேற்று முன்தினம் கூறும்போது, “பாஸ்போர்ட் கட்டணம், விரல்ரேகை பதிவுகள், புகைப்படங்கள் ஆகியவற்றை கிலானி சமர்ப்பிக்கவில்லை. விண்ணப்ப நடைமுறைகள் முழுமை அடையாததால் பரிசீலிக்க முடியாத நிலை உள்ளது” என்றது.

இந்த விவகாரத்தில் உள்துறை அமைச்சகம் கூறும் போது, “பாஸ்போர்ட் பெறுவது ஒவ்வொரு குடிமகனின் உரிமை. என்றாலும் உரிய நடை முறைகள் பூர்த்தி செய்யப்பட்ட பின்னரே வெளியுறவு அமைச் சகம் இதனை வழங்குகிறது” என்றது.

கிலானிக்கு பாஸ்போர்ட் வழங்கும் விவகாரத்தில் ஜம்மு காஷ்மீரில் ஆளும் கூட்டணியான பிடிபி பாஜக இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளது.

தேசவிரோத செயல்களுக்கு கிலானி மன்னிப்பு கேட்ட பிறகே அவருக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என்று பாஜக கூறியுள்ளது. ஆனால் மனிதாபிமான அடிப்படையில் கிலானிக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என்று பிடிபி கூறியுள்ளது.

ஜெட்டா நகருக்கு குடும்பத்துடன் செல்வதற்கு கிலானி பாஸ்போர்ட் கேட்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்ததாக கூறப்படு கிறது. ஆனால் விரல்ரேகை மற்றும் புகைப்படங்கள் தருவதற்கு அவர் ஸ்ரீநகரில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு இதுவரை நேரில் செல்லவில்லை.

புதிய விதிகளின்படி விரல்ரேகை, புகைப்படங்கள் தருவதற்கு மண்டல பாஸ் போர்ட் அலுவலகத்துக்கு விண்ணப்பதாரர் நேரில் செல்வது கட்டாயம் ஆகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in