

டெல்லியில் நேற்று மாலை மித மான நில அதிர்வு உணரப்பட்டது. வானிலைத் துறையின் தகவல்படி, ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இங்கும் அதன் தாக்கம் உணரப்பட்டுள்ளது. இதனால் நகரின் எந்தப் பகுதியிலும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
ஜப்பானில் கிழக்கு கடற்கரை யில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 8.5 ஆகப் பதிவாகியிருந்தது. எனினும், இந்த நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
டோக்கியோவில் இருந்து தெற் காக ஒகாசவாரா தீவுகளில் 590 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நில நடுக்கம் மையம் கொண்டிருந்த தாகக் கூறப்படுகிறது. ஜப்பானில் பரவலாக உணரப்பட்ட இந்த நில நடுக்கத்தால், சுனாமி ஆபத்து இல்லை என்று தெரிவிக்கப்பட் டுள்ளது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து புகுஷிமா அணுமின் நிலையத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று டோக்கியோ மின்சார நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல டோக்கியோவின் நரிடா விமான நிலையமும் எந்த பாதிப்புக்கும் உள்ளாகவில்லை என்று கூறப்பட் டுள்ளது. ஆனால் டோக்கியோ மற் றும் ஒசாகா ஆகிய நகரங்களுக்கு இடையேயான அதிவேக புல்லட் ரயில் சேவை மின்சார பழுது காரணமாக நிறுத்தப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.