மங்கோலியாவுக்கு இந்தியா ரூ.6,300 கோடி கடனுதவி: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு

மங்கோலியாவுக்கு இந்தியா ரூ.6,300 கோடி கடனுதவி: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு
Updated on
1 min read

மங்கோலியாவுக்கு ரூ.6,344 கோடி கடனுதவி வழங்கப்படும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் மங்கோலிய தலைநகர் உலன் படோருக்கு மோடி சென்றார். அங்கு அந்த நாட்டு பிரதமர் சைகான்பிலக்கை நேற்று அவர் சந்தித்துப் பேசினார்.

அப்போது மங்கோலியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்த இந்தியா சார்பில் ரூ.6,344 கோடி கடனுதவி அளிக்கப்படும் என்று மோடி அறிவித்தார். மேலும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சைபர் பாதுகாப்பு, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளுக்கும் இடையே 13 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

அதைத் தொடர்ந்து மங்கோலிய நாடாளுமன்றத்தில் மோடி உரையாற்றினார்.

பின்னர் அதிபர் சாக்கியாஜின் எல்பெக்டார் அளித்த மதிய விருந்தில் மோடி பங்கேற்றார்.

அணுஉலைகளுக்குத் தேவை யான யுரேனியம் மங்கோலியா வில் அதிகம் உள்ளது. 2009-ம் ஆண்டே அந்த நாட்டிடம் இருந்து யுரேனியத்தை பெற இந்தியா ஒப் பந்தம் மேற்கொண்டது. அது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in