

ஆம் ஆத்மி மூத்த தலைவர் குமார் விஸ்வாஸ் விவகாரம் தொடர்பாக டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் வீட்டை பாஜகவினர் நேற்று முற்றுகையிட்டனர்.
குமார் விஸ்வாஸுக்கும் கட்சி யின் பெண் தொண்டர் ஒருவருக்கும் இடையே தகாத உறவு இருப்பதாக தகவல்கள் பரவின. இதை மறுத்து குமார் விஸ்வாஸ் விளக்கம் அளிக்கவில்லை என்று குற்றம் சாட்டி பாதிக்கப்பட்ட பெண் டெல்லி மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் வீட்டை பாஜகவினர் நேற்று முற்றுகையிட்டனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
இதைத் தொடர்ந்து கேஜ்ரிவாலின் வீட்டின் முன்பு கோஷமிட்ட பாஜகவினர், குமார் விஸ்வாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதுகுறித்து கேஜ்ரிவால் கூறிய போது, ஆம் ஆத்மி தலைவர்களை குறிவைத்து எதிர்க்கட்சிகள் அவ தூறு பிரச்சாரம் செய்து வருகின்றன, ஊடகங்களும் ஆம் ஆத்மிக்கு எதிராகச் செயல்படுகின்றன என்று குற்றம் சாட்டினார்.
குமார் விஸ்வாஸ் கூறியபோது, எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பாஜகவும் காங்கிரஸும் செயல்படுகின்றன. உண்மை ஒருநாள் வெளிச்சத் துக்கு வரும் என்றார்.