

உத்தரப் பிரதேச மாநிலத்தில் லஷ்கர்-இ-தய்பா இயக்கத்தைச் சேர்ந்த ஒரு தீவிரவாதியை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து டெல்லி காவல் துறை சிறப்புப் பிரிவின் சிறப்பு ஆணையர் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா கூறும்போது, “உத்தரப் பிரதேச மாநிலம் பரைக் மாவட்டத்தில் இர்பான் (50) என்பவரை கடந்த வாரம் கைது செய்தோம். இவர் பாகிஸ்தானிலிருந்து செயல்படும் லஷ்கர்-இ-தய்பா அமைப்பைச் சேர்ந்தவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பிலும் பணியாற்றியுள்ள இவர், பல்வேறு தீவிரவாத வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியாக இருந்தார்” என்றார்.
கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில், லஷ்கர் அமைப்பின் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் வெளிநாட்டினர் உட்பட மொத்தம் 166 பேர் பலியாயினர் என்பது குறிப்பிடத்தக்கது.