

காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு தனியாக குடியிருப்புகள் அமைக்க ஜம்மு காஷ்மீர் அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை அனுமதிக்க மாட்டோம் என எதிர்க் கட்சியான தேசிய மாநாட்டுக் கட்சி அறிவித்துள்ளது. எனினும் அவர்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள சொந்த இடங்களுக்கு திரும்ப அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறியுள்ளது. இது தொடர்பாக தேசிய மாநாட்டுக் கட்சியின் பொதுச் செயலர் அலி முகம்மது சாகர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு தனி குடியிருப்புகள் அமைப்பதை நாங்கள் எதிர்க்கிறோம். ஆனால் அவர்கள் காஷ்மீர் திரும்புவதை வரவேற்கிறோம். அவர்கள் பள் ளத்தாக்கில் உள்ள சொந்த இடங்களுக்கு திரும்புவதை எப்போதுமே தேசிய மாநாடு ஆதரிக்கிறது. அவர்கள் முஸ்லிம் சகோதரர்களுடன் இணைவதை மனதார வரவேற்கிறோம்.
ஹுரியத் தலைவர் கிலானி தலைமையில் நடந்த பேரணியில் பாகிஸ்தான் தேசியக் கொடி பறக்கவிடப்பட்டது பெரிய பிரச்சினை இல்லை. இதற்கு முன்னரும் பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்டது நிகழ்ந்துள்ளது. பாகிஸ்தானை விரும்புவோர் உள்ளனர். அத்தகையோர் இப்படி பாகிஸ்தான் தேசியக்கொடியை பறக்க விடுகின்றனர் என்றார்.
முன்னதாக மாநில அரசின் புதிய பணி நியமனக் கொள்கை யைக் கண்டித்து தேசிய மாநாட் டுக் கட்சியினர் பேரணி நடத்தினர்.