Published : 05 May 2015 08:25 AM
Last Updated : 05 May 2015 08:25 AM

என்கவுன்ட்டரில் 20 தமிழர்கள் படுகொலை: ஆந்திர முதல்வர் மீது கொலை வழக்கு - ஆளுநரிடம் இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆந்திர மாநில செயலாளர் நாராயணா தலைமையிலான குழுவினர், நேற்று காலையில் ஆந்திர ஆளுநர் ஈ.எஸ்.எல். நரசிம்மனை அவரது அலுவல கத்தில் சந்தித்து புகார் அளித் தனர். பின்னர் நாராயணா செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

மாநிலப் பிரிவினை சட்டத்தின் படி மத்திய அரசு ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை பெற முடியா விட்டால், முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது அமைச்சரவையை கலைத்து விட்டு தானும் ராஜினாமா செய்ய வேண்டும்.

மேலும், திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டுள்ள முக்கிய நபர்களை பிடிக்காமல், தமிழகத்தைச் சேர்ந்த 20 கூலி தொழிலாளர்களை போலீஸார் சுட்டு கொன்றுள்ளனர். இறந்த வர்களில் பெரும்பாலானவர்கள் பழங்குடி, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஏழைகள்.

நாட்டிலேயே இதுவரை இல்லாத வகையில் நடைபெற்ற இந்த என்கவுன்ட்டர் ஒரு மாநில முதல்வருக்கு தெரியாமல் நடைபெற வாய்ப்பே இல்லை. ஆதலால் இவ்வழக்கில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீதும் இந்திய தண்டனைச் சட்டம் 302-ன் படி கொலை வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்துள்ளோம். இவ்வாறு நாராயணா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x