

கொல்கத்தாவில் நோயாளியை பார்க்க வந்த இளம் பெண் ஒருவர் மருத்துவமனை ஊழியர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொல்க்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து போலீஸார் கூறும்போது, "கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது உறவினரைப் பார்ப்பதற்க்காக அந்தப் பெண் வந்துள்ளார். அவருக்கு வயது 24. சொந்த ஊர் முர்சிதாப் மாவட்டத்தில் உள்ள பஹ்ரம்பூர். தனது உறவினரை பார்த்துவிட்டு திரும்பும்போது மருத்துவமனையின் லிஃப்ட் ஊழியர்கள் இருவர் சேர்ந்த அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர்.
இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டது. சம்பவத்தில் தொடர்ப்ய்டைய மவுசம் அலி கான், ஹைதர் அலி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனை அறிக்கையை எதிர்நோக்கியுள்ளோம்" என்றார்.
இந்தச் சம்பவத்துக்குப் பின்னர், கொல்கத்தாவின் பல்வேறு மருத்துவமனைகளிலும் பணியாற்றும் பெண்கள் தங்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாக வருத்தம் தெரிவித்துள்ளனர்.