

திரிபுராவில் கடந்த 18 ஆண்டு களாக அமலில் உள்ள சர்ச்சைக் குரிய ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை (அப்ஸ்பா) வாபஸ் பெறுவது என அம்மாநில அரசு நேற்று முடிவு செய்தது.
அகர்தலாவில் நேற்று நடை பெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இதுதொடர்பாக திரிபுரா முதல்வரும் உள்துறை அமைச்சருமான மாணிக் சர்க்கார் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
அப்ஸ்பா சட்டத்தால் பாதிக்கப் படும் பகுதிகளின் நிலவரம் குறித்து 6 மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்து வருகி றோம். மேலும் இந்த விவகாரம் குறித்து மாநில போலீஸ் மற்றும் மாநிலத்தில் பணியாற்றும் இதர பாதுகாப்புப் படையினருடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
அப்போது, ஊடுருவல் பிரச் சினை இப்போது கட்டுப்படுத்தப் பட்டுள்ளதால் அப்ஸ்பா சட்டம் தேவையில்லை என்று அவர்கள் ஆலோசனை தெரிவித்தனர். எனவே, அந்த சட்டத்தை வாபஸ் பெறுவது என முடிவெடுக்கப் பட்டது. விரைவில் இதுதொடர் பான அறிவிப்பு அரசிதழில் வெளி யிடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கடந்த 1997-ம் ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதி இந்த சட்டம் திரிபுராவில் அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.