Published : 30 May 2015 08:41 AM
Last Updated : 30 May 2015 08:41 AM

நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்த பாலிவுட் நடிகை மாதுரி தீக்‌ஷித்துக்கு நோட்டீஸ்: ரசாயன உப்பு அதிகம் உள்ளதாக புகார்

நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்துள்ள, பிரபல பாலிவுட் நடி கைக்கு உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இரண்டு நிமிடங்களில் தயாரிக்க கூடிய நூடுல்ஸ் விளம்பரத் தூதுவராக பாலிவுட் நடிகை மாதுரி தீக் ஷித் நிய மிக்கப்பட்டுள்ளார். இந்த நூடுல்ஸை குழந்தைகள், சிறுவர்கள் விரும்பி உண்கின்றனர். அவர்களை கவரும் வகையில் நூடுல்ஸ் விளம்பரங்கள் அமைந் துள்ளன.

இந்நிலையில், உத்தரப் பிரசேத்தை சேர்ந்த உணவு பாது காப்பு நிர்வாக அமைப்பு, நூடுல் ஸின் சேம்பிள்களை சேகரித்து ஆய்வு செய்தது. அப்போது, அதில் மோனோசோடியம் குளூடாமேட் என்ற உப்பு, அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக இருப்பது தெரியவந்துள்ளது. இது குழந்தைகளின் வளர்ச் சியை பாதிக்கக் கூடியது என்று தெரி வித்தது.

இதையடுத்து உத்தரப் பிரதேசத்தில் விற்பனைக்கு அனுப் பப்பட்ட நூடுல்ஸ்களை உடனடியாக திரும்பப் பெறும் படி அதை தயாரிக்கும் நிறுவனத்துக்கு உத்தரவிடப் பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, விளம்பரங் களில் நடித்துள்ள மாதுரிக்கு, உத்தராகண்ட் மாநில உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், “2 நிமிடங்களில் நூடுல்ஸ் தயார் என்றும் சத்தானது என்றும் விளம்பரங்களில் கூறி நடித்துள்ளீர்கள். எந்த வகையில் இந்த நூடுல்ஸ் சத்தானது என்பதை 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

நோட்டீஸுக்கு 15 நாட்களுக் குள் நடிகை மாதுரி பதில் அளிக்காவிட்டால், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரி மகிமானந்த் ஜோஷி நேற்று தெரிவித்தார்.

இதனிடையே நூடுல்ஸில் மோனோ சோடியம் குளுடா மேட் அளவுக்கு அதிகமாக இல்லை என்று நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.

'விளம்பரத்தில் நடிக்கும் நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது'

‘நூடுல்ஸ்’ விளம்பரத்தில் நடித்த நடிகை மாதுரி தீக் ஷித் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்று நுகர்வோர் நீதிமன்ற வழக்கறிஞர் வி.சங்கர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

உணவுப் பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள்,நகைகள் போன்றவற்றை வியாபாரம் செய்ய பல நிறுவனங்கள் உள்ளன. இவற்றை மக்களிடம் விளம்பரப்படுத்த சினிமா நடிகர்களை அந்த நிறுவனங்கள் நடிக்க வைக்கின்றன.

இந்நிலையில் நிறுவனத்தின் பொருள் தரமற்றது என தெரியவந்தால், அதற்காக விளம்பரத்தில் நடித்த நடிகர்கள் மீது வழக்கு தொடர முடியாது. ஏனென்றால் நடிகர்களை பார்த்து நுகர்வோர் பொருட்களை வாங்குவதில்லை. பொருட்களை விற்கும் நிறுவனத்தின் தரத்தை பார்த்துதான் பொருட்களை வாங்குகின்றனர்.

மேலும் நுகர்வோர் பொருட் களை வாங்குதன் மூலம் கிடைக் கும் லாபம் சம்பந்தப்பட்ட நிறு வனத்துக்குதான் கிடைக்கிறது.

விளம்பரத்தில் நடிக்கும் நடிகர்கள் அந்த பொருளை முன்னிலைப்படுத்துகின்றனர்.அவ்வளவு தான். இதற்காக அவர்கள் மீது சட்டரீதியான எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. இதற்கு நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், குற்றவியல் சட்டம் ஆகியவற்றில் இடமில்லை.

நோட்டீஸ் வழங்கப்பட்டதற்கு சம்பந்தப்பட்ட நடிகை விளக்கம் அளித்தால் மட்டும் போதும். மற்றபடி அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி லக்‌ஷ்மி நாராயணன் கூறும்போது, “உணவு பாது காப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் 2006-ன் படி, தவறாக வழி நடத் தும் விளம்பரங்கள் வெளியிடப் பட்டால், அந்த பொருளின் தயாரிப் பாளர் மீது அதிகபட்சமாக ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும். இது போன்ற பொருட்களின் விளம்பரங்களில் நடிப்பவர்களிடம் விளக்கம் மட்டுமே கேட்க முடியும். விளம்பரத்தில் நடித்ததற்காக, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது” என்றார்.

- எல்.ரேணுகாதேவி, வி.சாரதா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x