

கேரள மாநிலத்தில் பேராசிரியரின் கையை வெட்டிய வழக்கில் 10 பேருக்கு தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனையும், மூவருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் மொத்தம் ரூ. 8 லட்சம் அபராதமும் விதித்து கொச்சியிலுள்ள தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் மூவாட்டுப்புழா பகுதி யைச் சேர்ந்தவர் டி.ஜே. ஜோசப். மலையாளம் கற்பிக்கும் பேராசிரியரான இவர் கடந்த 2010- ஜூலை 4-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை தேவாலய பிரார்த் தனையை முடித்து விட்டு குடும்பத்துடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த சிலர் டி.ஜே.ஜோசப்பை வழிமறித்து அவரது கையை வெட்டினர். இதுதொடர்பாக 31 பேர் கைது செய்யப்பட்டனர்.
கல்லூரி உள்மதிப்பீட்டுத் தேர்வில் முகமது நபியை இழிவுபடுத்தும் விதத்தில் ஜோசப் கேள்வி கேட்டிருந்ததால், ஆத்திர மடைந்தவர்கள், இந்த செயலில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.
இதுதொடர்பான வழக்கு கொச்சி என்ஐஏ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவில் 13 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது, 18 பேர் விடுவிக்கப்பட்டனர்.
குற்றவாளிகளுக்கான தீர்ப்பு நேற்று அறிவிக்கப்பட்டது. இதில், 10 பேருக்கு தலா 8 ஆண்டு கள் சிறையும், மூவருக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்ட னையும் விதிக்கப்பட்டது.மேலும் பாதிக்கப்பட்டவருக்கு, குற்ற வாளிகள் ரூ.8 லட்சம் இழப்பீடு அளிக்கவும் உத்தரவிடப்பட்டது.
அந்த 8 பேரையும் மன்னித்து விட்டதாக பேராசிரியர் ஏற் கெனவே கூறியிருந்தார்.இதனி டையே ஜோசப்பின் மனைவி கடந்த மாதம் தற்கொலை செய்துகொண்டார். ஜோசப்பின் மருத்துவ செலவு உட்பட அவருக்கு சேரவேண்டிய நிலு வைத் தொகையை வழங்க நிதித் துறைக்கு முதல்வர் உம்மன் சாண்டி உத்தரவிட்டது குறிப் பிடத்தக்கது.