

மருத்துவர்களால் மட்டுமே பரிந்துரைக்கப்படும் மருந்துப் பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்தது தொடர்பாக ஸ்நாப்டீல் நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு போலீஸாருக்கு மகாராஷ்டிர மாநில உணவு மற்றும் மருந்து பொருட்கள் நிர்வாக அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
பிளிப்கார்ட், அமேசான் போன்ற நிறுவனங்களும் இதுபோன்று மருந்து பொருட்களை ஆன் லைனில் விற்பனை செய்கின்றனவா என்பது குறித்து விசாரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மருத்துவர்கள் மட்டுமே பரிந்துரைக்கும் மருந்துகளை ஸ்நாப்டீல் நிறுவனம் ஆன்லைனில் நேரடியாக விற்பதாக மகாராஷ் டிர மாநில உணவு மற்றும் மருந்து பொருட்கள் நிர்வாக அமைப்புக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து ஸ்நாப்டீல் நிறுவன குடோனில் சோதனை நடைபெற்றது. இதில் அதுபோன்ற மருந்துகளை விற் பனை செய்வது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி, இயக்குநர்கள், விநியோகஸ்தர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தர விடப்பட்டுள்ளது.