Published : 01 May 2015 07:40 AM
Last Updated : 01 May 2015 07:40 AM

நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிராக மே 14-ம் தேதி இடதுசாரிகள் போராட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எஸ்.சுதாகர் ரெட்டி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தொழில்மயமாவதற்கு இடதுசாரிகள் எதிர்ப்பாளர்கள் அல்ல. ஆனால், நிலம் கையகப் படுத்தும் மசோதா போன்று மத்திய அரசு கையாளும் வழிமுறைகளுக் குத்தான் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். இதைக் கண்டித்து வரும் 14-ம் தேதி நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, மக்கள் பிரச்சினைகள் குறிப்பாக விவசாயிகளின் பிரச்சினைகளுக் குத் தீர்வு காண்பதில் தோல்வி யடைந்துவிட்டது. பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை யைப் பராமரிப்பதில் தோல்வி யடைந்திருக்கிறது. அதன் கொள்கைகளுக்கும் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கும் இடையே எவ்வித வேறுபாடுகளும் இல்லை. கொல்கத்தா மாநகராட்சி தேர்த லில் பெரும் தில்லுமுல்லு செய்தும், வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டும் மம்தாவின் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இது ஜனநாயக முறையிலான தேர்தல் அல்ல. அடுத்த ஆண்டு மேற்கு வங்கத்தில் நடைபெற வுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் இடதுசாரிகள் முழு பலத்துடன் வெளிப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x