

மக்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 543 உறுப்பினர்களின் பட்டியலை குடியரசுத் தலைவரிடம் தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை அளித்தது.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை தலைமை தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத், தேர்தல் ஆணையர்கள் எச்.எஸ்.பிரம்மா, நசீம் ஜைடி ஆகியோர் ராஷ்டிரபதி பவனில் நேற்று சந்தித்தனர். அப்போது 16-வது மக்களவையின் உறுப்பினர்கள் பட்டியலை அவர்கள் அளித்தனர். இதன் மூலம் புதிய அரசு அமைப்பதற்கான நடைமுறைகளை குடியரசுத் தலைவர் தொடங்குவார்.
பாஜக நாடாளுமன்ற கட்சி கூட்டம் செவ்வாய்க்கிழமை நடை பெறவுள்ளது. இதில் நரேந்திர மோடி, தலைவராக தேர்ந்தெடுக் கப்படுவார். இதையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களின் கூட்டம் நடைபெறும். இதில் கூட்டணியின் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.