

இந்தியாவில் புற்றுநோய் கார ணமாக தினமும் 1,300-க்கும் மேற்பட்டோர் பலியாவதாக புள்ளி விவரம் கூறுகிறது. இதன் மூலம் மனித உயிரிழப்புக்கு முக்கிய காரணமாக புற்றுநோய் உருவெடுத்துள்ளது. அடுத்த படியாக எலும்புருக்கி (டிபி) நோய் 2-ம் இடத்தைப் பிடித் துள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆர்) தேசிய புற்றுநோய் பதிவக புள்ளி விவரப்படி, கடந்த 2012 முதல் 2014 வரையிலான காலத்தில் புற்றுநோய்க்கு பலியானோர் எண்ணிக்கை 6 சதவீதம் அதி கரித்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடந்த 2014-ம் ஆண்டில் புற்று நோயாளிகள் எண்ணிக்கை 28.2 லட்சமாக இருந்தது. இதில் 4.91 லட்சம் பேர் பலியாயினர். 2013-ம் ஆண்டில் 29.34 லட்சம் நோயாளி களில் 4.78 லட்சம் பேரும், 2012-ல் 30.16 லட்சம் நோயாளிகளில் 4.65 லட்சம் பேரும் பலியாயினர்.
அதிக அளவிலான முதிய வர்கள் எண்ணிக்கை, சுகாதார மற்ற வாழ்வியல் முறைகள், புகையிலை மற்றும் புகை யிலை பொருட்களை பயன் படுத்துதல், சுகாதாரமற்ற உணவு, நோய்களை முன் கூட்டியே கண்டறிவதற்கு போது மான வசதியின்மை உள்ளிட் டவை புற்று நோய்க்கு பலியா வோர் எண்ணிக்கை அதிகரிப் பதற்கான சில முக்கிய காரணங் கள் ஆகும்.
பொதுவாக, நோய்களை முன் கூட்டியே கண்டறிவதற்கான மைக்ரோஸ்கோபி மையங்கள், 1 லட்சம் மக்கள் தொகைக்கு ஒன்று என்ற வகையில்தான் நிறுவப் பட்டுள்ளன. இதுவே மலைப் பகுதியில் 50 ஆயிரம் பேருக்கு ஒன்றாக உள்ளது. நாடுமுழுவதும் 13 ஆயிரம் மைக் ரோஸ்கோபி மையங்களும் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட நேரடி கண்காணிப்பு சிகிச்சை மையங்களும் உள்ளன.
புற்றுநோயாளிகளுக்கு சிறப்பு ஆலோசனை வழங்கு வதற்கான திட்டத்தை விரிவு படுத்த 2013-14-ம் ஆண்டில் மத்திய அரசு ஒப்புதல் அளித் தது. இத்தகைய மையங் களின் வசதியை அதிகரிக்குமாறு மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
திருத்தப்பட்ட தேசிய டிபி கட்டுப்பாட்டு திட்டத்தின் புள்ளி விவரப்படி, நாட்டில் ஏற்படும் மனித உயிரிழப்புக்கு 2-வது முக்கிய காரணியாக டிபி நோய் விளங்குகிறது.
கடந்த 2011-ம் ஆண்டு டிபி நோய்க்கு 63,265 பேர் பலி யாயினர். இது 2012-ல் 61,887 ஆகவும், 2013-ல் 57,095 ஆக வும் இருந்தது.