Last Updated : 31 May, 2015 09:37 AM

 

Published : 31 May 2015 09:37 AM
Last Updated : 31 May 2015 09:37 AM

ஒற்றை இலக்க லாட்டரி முறைகேடு: 16 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கர்நாடக சிஐடி போலீஸார் சம்மன் - அரசுக்கு கடும் நெருக்கடி

கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒற்றை இலக்க லாட்டரி முறைகேட்டில் தொடர்பு டைய 16 ஐபிஎஸ் அதிகாரி களுக்கு சிஐடி போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்திருப் பதால் கர்நாடக அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கடந்த 2007-ம் ஆண்டு லாட்டரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் கேரள,மகாராஷ்டிரா எல்லையோர மாவட்டங்களில் முறைகேடாக ஒற்றை இலக்க லாட்டரி விற்பனை நடந்துவந்தது. இதையடுத்து கர்நாடக அரசு இந்த கும்பலைப் பிடிக்குமாறு சிஐடி போலீஸாருக்கு உத்தரவிட்டது.

சிஐடி போலீஸார் நடத்திய விசாரணையில் கோலார் தங்க வயலை சேர்ந்த பாரி ராஜன் (56) என்பவருக்கு இதில் நேரடி தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார், ஒற்றை இலக்க லாட்டரி முறைகேட்டில் 6 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப் பதை கண்டுபிடித்தனர். இதனி டையே பாரி ராஜனுடன் நெருங்கி பழகிய பெங்களூரு போலீஸ் கூடுதல் கமிஷனர் அலோக்குமார் உட்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், ஒற்றை இலக்க லாட்டரி முறைகேட்டில் கர்நாடக அரசுக்கும், முக்கிய அரசியல் தலைவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் நேரடி தொடர்பிருப்பதாக பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கின. மேலும் முன்னாள் முதல்வர் குமாரசாமி ஆளுநர் கவர்னர் வஜூபாய் வாலாவை சந்தித்து இவ்விவகாரத்தில் விரிவான விசாரணை தேவை என வேண்டுகோள் விடுத்தார்.

இதையடுத்து கர்நாடக முதல்வர் சித்தராமையா ஒற்றை இலக்க லாட்டரி முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்துமாறு சிபிஐ அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தார். எனவே இந்த விவகாரம் தொடர்பான முக்கிய ஆவணங்கள், கோப்புகள் அனைத்தும் நேற்று டெல்லிக்கு அனுப்பப்பட்டன.

நடுக்கத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள்

இந்நிலையில் கர்நாடக சிஐடி போலீஸார் பாரி ராஜனுடன் நேரடி தொடர்பில் இருந்ததாக சிலரை கண்டுபிடித்துள்ளனர். அதில் 24 பேருக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சம்மன் அனுப்பியுள்ளனர்.

அதில் தற்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர், காவல் ஆணையர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளில் உள்ள 16 ஐபிஎஸ் அதிகாரிகளும் இடம் பெற்றுள்ளனர். குறிப்பாக பெங்களூரு மாநகர குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் ஹரிசேகரன், பாஸ்கர் ராவ், சுனில்குமார், லோகேஷ் குமார், சதீஷ் குமார், ராஜேந்திர பிரசாத் உள்ளிட்ட 16 ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்கள் கசிந்துள்ளது.

கர்நாடக அரசில் முக்கிய பொறுப்புகளை வகிக்கும் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப் பப்பட்டுள்ளதால் எதிர்க் கட்சிகள் கடும் கண்டனம் தெரி வித்துள்ளன. மேலும் முதல்வர் சித்தராமையாவும், உள்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜூம் உடன டியாக ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இதனிடையே மேலும் பல ஐபிஎஸ் அதிகாரிகளும், முன்னாள் காவல்துறை அதிகாரிகளும், பல முக்கிய தலைவர் களும் சிக்குவார்கள் என தகவல் கசிந்துள்ளது. இதனால் கர்நாடகத் தில் ஐபிஎஸ் அதிகாரிகள் நடுக்கத் தில் இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x