கர்நாடக முதல்வர் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை

கர்நாடக முதல்வர் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை
Updated on
1 min read

கர்நாடக போலீஸ் உயர் அதிகாரிகளுடன் அம்மாநில முதல்வர் சித்தராமையா ஆலோசனை நடத்தினார்.

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கின் தீர்ப்பு மே 11-ம் தேதி (திங்கள்கிழமை) வெளியாகிறது.

எந்த அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கி விடுவது என பெங்களூரு காவல்துறை முடிவு செய்துள்ளது.

மே 11 -ம் தேதி தீர்ப்பை ஒட்டி பெங்களூருவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் போலீஸ் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in