மோகினி அவதாரத்தில் கோவிந்தராஜர் பவனி

மோகினி அவதாரத்தில் கோவிந்தராஜர் பவனி
Updated on
1 min read

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயில் பிரம்மோற்சவ விழாவின் 5-ம் நாளான நேற்று காலை, மோகினி அவதாரத்தில் உற்சவர் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

பலவித வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் மோகினி அவதாரத்தில் பவனி வந்த கோவிந்த ராஜ பெருமாளை, நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர். பல்லக்கின் முன், திரளான பக்தர்களுடன் பஜனை குழுவினர் பஜனை பாடியும், நடனக் கலைஞர்கள் நடனமாடியும் சென்றனர். இதைத்தொடர்ந்து கொட்டும் மழையில் புகழ்பெற்ற கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. மாட வீதிகள் ஏராளமான பக்தர்கள் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in