பொருளாதார வளர்ச்சி பற்றிய உலகளாவிய புதிய பார்வை தேவை: ரகுராம் ராஜன்

பொருளாதார வளர்ச்சி பற்றிய உலகளாவிய புதிய பார்வை தேவை: ரகுராம் ராஜன்
Updated on
1 min read

வளர்ச்சி பற்றி உலக நாடுகள் பலவும் யோசிக்கையில் தங்களைப் பற்றியே யோசிக்கின்றன என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.

உலகத்துக்கு நன்மை விளைவிக்கும் வளர்ச்சி பற்றி யோசிக்க பல நாடுகளுக்கு ஆர்வம் இருப்பதில்லை என்று அவர் நவீன பொருளாதார வளர்ச்சி குறித்த பார்வைகளையும் அணுகுமுறைகளையும் சாடியுள்ளார்.

சென்னையில் மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் இகானமிக்ஸில் அவர் உரையாற்றும் போது இவ்வாறு கூறினார்.

“பன்னாட்டு அமைப்புகள் பாரபட்சமாக நுழைத்து நாடுகள் கடைபிடிக்கத் தேவையான நீடித்த வளர்ச்சிக்கான சூழ்நிலைகளை, நாம் உருவாக்க முயற்சி செய்தாலும், நாடுகள் சர்வதேச பொறுப்புகளைக் கடைபிடிக்க உத்தரவாதமான புதிய ஆட்ட விதிகள் தேவை.

இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய பொருளாதார வளர்ச்சிக்கான விதிமுறைகள் மிகப் பழமையானவை. நாடுகளுக்கு எம்மாதிரியான விதிமுறைகள் அனுமதிக்கப்படலாம் என்பதை புதிய விதிமுறைகள் தீர்மானிக்கும் நிலையில் உலகம் உள்ளது.

தொழில்துறை நாடுகளுக்கும் எழுச்சி பெற்று வரும் சந்தைகளுக்கும் இடையே வளர்ச்சி குறித்த பயங்கர அழுத்தம் ஏற்பட்டுள்ளது. பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு வளர்ச்சி ஏற்படாத நிலையில், நாடுகள் ஒருவரிடமிருந்து வளர்ச்சியை பறிக்கும் போட்டியில் ஈடுபடுகின்றன. அன்னியச் செலாவணி பரிமாற்ற விகிதத்தை வேண்டுமென்றே குறைத்து தேவையை அதிகரிக்கச் செய்கின்றனர். மாறாக முறையான கொள்கைகள் மூலம் தேவை தானாகவே உருவாக வழிவகுப்பதில்லை.

நெருக்கடி ஏற்படுகிறது என்றால், நெருக்கடியை மற்றொரு பிரதேசத்துக்கு மாற்றி விடுவதுதான் நடைபெறுகிறது. அந்த பிரதேசமும் தனது கொள்கைகளை வகுத்து நெருக்கடி மற்றொரு பிரதேசத்துக்கு தள்ளி விட முயற்சி செய்கின்றனர்.

இதனால் புதிய சமூக சமச்சீரற்ற நிலையின்மைகள் தோன்றுகின்றன. நாம் உலகமயமாதல் காலக்கட்டத்தில் இருப்பதால் உலக வளர்ச்சிக்கான கொள்கைகளை வடிவமைப்பதை விடுத்து ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்கு சுமையை எப்படி மாற்றலாம் என்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். வளர்ச்சிக்கு கூடுதலாக சேர்க்கப்படும் இன்றைய கொள்கைகளுக்கான பயன்கள் மிகவும் குறைவு என்பதோடு, அரசியல் ரீதியாக வலி நிறைந்ததாக மாறிவிடுகிறது.

இத்தகைய சமச்சீரற்ற பொருளாதார நிலையின்மைகள் தற்போது ஏற்படவில்லை, இவை கடந்த இரு பத்தாண்டுகளில் உலகின் பல்வேறு பகுதிகளில் குறைந்தது 3 முறையாவது ஏற்பட்டிருக்கும்.

நாடுகள் சுய-காப்பீடு அடைய இப்போது உள்ளதைவிடவும் சிறந்த பாதுகாப்பு வலையங்களை உருவாக்க வேண்டும். பாதுகாப்பு வலை அளவுகோலாக நாடுகள் தற்போது ஒதுக்கீடுகளை கட்டமைத்து வருகிறது. அனைத்து நாடுகளும் ஒதுக்கீடு செய்து கொண்டால் அனைத்தையும் ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியாது.

கூட்டு ஆதாரங்களுடன் பரஸ்பர உத்தரவாதங்கள் அவசியம்” இவ்வாறு அந்த உரையில் கூறியுள்ளார் ரகுராம் ராஜன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in