

பாகிஸ்தானின் கராச்சி நகரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "கராச்சி தாக்குதல் மிகவும் துயரமானது; முற்றிலும் கண்டனத்திற்குரியது.
தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
பாகிஸ்தானில் இப்போது ஏற்பட்டிருக்கும் துயரமான சூழலில் அந்நாட்டு மக்களுக்கு நாங்கள் துணை நிற்போம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.