Published : 15 May 2015 07:18 PM
Last Updated : 15 May 2015 07:18 PM

சீனப் பிரதமருடன் நரேந்திர மோடி எடுத்துக்கொண்ட செல்பிக்கு அசத்தல் வரவேற்பு

சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, சீன பிரதமர் லீ கெக்கியாங்குடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட செல்பிக்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த செல்பி புகைப்படத்தை பிரதமர் மோடி தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட 2 மணி நேரங்களில் 325,272 லைக்குகளையும், 4,428 பகிர்வுகளையும் அள்ளியது.

இதற்கான வரவேற்பு மேலும் அதிகரித்துக் கொண்டே செல்லும் போல் தெரிகிறது.

இந்த செல்பிக்கு லைக்கிட்டவர்களில் பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்கும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x