

மாணவர்களை ஏமாற்றியதாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அளித்த புகாரின் பேரில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பிளானிங் அண்ட் மேனேஜ்மென்ட் (ஐஐபிஎம்) நிறுவனர் அரிந்தம் சவுத்ரி மீது டெல்லி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து டெல்லி காவல் துறை இணை ஆணையர் (குற்றப் பிரிவு) ரவீந்திர யாதவ் கூறும்போது, “உரிய அங்கீகாரம் பெறாமலேயே படிப்புகளை நடத்தி மாணவர்களை ஏமாற்றி வருவதாக ஐஐபிஎம் மீது யுஜிசி புகார் கொடுத்தது.
இதன் அடிப்படையில், ஐஐபிஎம் டீன் அரிந்தம் சவுத்ரி அவரது தந்தை மலயேந்திர கிசோர் சவுத்ரி (இயக்குநர்) ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் 420-வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரித்து வருகிறோம். விசாரணைக்காக நேரில் ஆஜராகும்படி இருவருக்கும் நோட்டீஸ் தரப்பட்டுள்ளது” என்றார்.
படிப்புகளுக்கு அங்கீகாரம் பெறப்படாத நிலையிலும் அவற்றுக்கு அதிக கட்டணம் வசூலித்து மாணவர்களை ஏமாற்றி வருவதாகவும் யுஜிசி தனது புகாரில் தெரிவித்துள்ளது.
இதனிடையே யுஜிசி கொடுத் துள்ள புகார் மீது கேள்வி எழுப்பியுள்ள ஐஐபிஎம், மாணவர்கள் யாரையும் ஏமாற்ற வில்லை என தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரிந்தம் சவுத்ரி வெளியிட்டுள்ள அறிக் கையில் “எங்களது நிறுவனத் துக்கு அங்கீகாரம் தரப்பட் டுள்ளதாக நாங்கள் எப்போதும் தெரிவித்தது கிடையாது. பட்டம் கொடுப்பதாகவும் நாங்கள் சொன்னதில்லை.
யுஜிசி-யும் ஏஐசிடிஇ அமைப் பும் எங்கள் மீது பொய்யான செய்தியைப் பரப்புகின்றன. எனினும், இதுதொடர்பாக போலீஸ் விசாரணைக்கு நாங்கள் ஒத்துழைப்பு கொடுத்து வரு கிறோம்” என அந்த அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.