

வடக்கு டெல்லியில் உள்ள புராரி பகுதியில், ‘ஆட்டோ சம்வாத்’ பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கூறியதாவது:
டெல்லி துணை ஆளுநரால் நியமிக்கப்பட்ட தலைமை செயலர் சகுந்தலா காம்ளின், தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார். ஆம் ஆத்மி பதவியேற்ற பிறகு, மின்துறை அமைச்சரை சந்தித்த சகுந்தலா, ஒரு கடிதத்தைக் காட்டி கையெழுத்திட கூறியிருக் கிறார். ரிலையன்ஸ் நிறுவனத் துக்கு சொந்தமான மின் உற் பத்தி நிறுவனங்கள், ரூ.11 ஆயிரம் கோடி கடன் கேட்டு விண்ணப் பித்துள்ளன. அந்தக் கடிதத்தில் அமைச்சரை கையெழுத்திட சொல்லி, இது சாதாரண நடை முறைதான் என்று கூறியிருக்கிறார்.
எங்கள் அமைச்சரோ அந்தக் கடிதத்தைப் படித்து பார்த்ததில், மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு கடன் வழங்க டெல்லி அரசு உறுதி அளிப்பதற்கான கடிதம் என்று தெரியவந்துள்ளது. கடன் வாங்கிய பிறகு அந்த நிறுவனங்கள் பணத்தை திரும்ப செலுத்தாமல் போனால், அந்த சுமை மக்கள் மீதுதான் விழும். மின் கட்டணம் இரண்டு மூன்று மடங்கு அதிகரிக்கும்.
சகுந்தலாவை தலைமை செயலராக நியமிக்க கூடாது என்று டெல்லி அரசு எதிர்ப்பு தெரி வித்தது. அதையும் மீறி அவரை மத்தியில் உள்ள பாஜக அரசு நியமித்துள்ளது.
சகுந்தலா மூலம் டெல்லி அரசை தோல்வி அடைய செய்ய பாஜக முயற்சிக்கிறது. ஆனால், தலைமை செயலர் சகுந்தலா அலுவலகத்துக்கு செல் லும் ஆவணங்களை எல்லாம் நான் பார்த்த பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளேன். அவரது செயல்பாடுகளை தீவிரமாக கண்காணிப்பேன்.
இவ்வாறு கேஜ்ரிவால் கூறினார்.
ஷீலா தீட்சித் அதிருப்தி
தலைமை செயலர் சகுந்தலா நியமனத்தில் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் நேற்று கூறுகையில், ‘‘முதல்வர் - ஆளுநர் இடையே ஒத்துழைப்பு இல்லாவிடில், அது டெல்லி மக்களை பெரிதும் பாதிக்கும். நிர்வாகம் சரியாக செயல்படவில்லை எனில், அது டெல்லிக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும்’’ என்று அதிருப்தி தெரிவித்தார்.