

நடிகர்அமிதாப் பச்சன் தனது ட்விட்ட ரில் கவிதை ஒன்றை வெளியிட்டார். அந்தக் கவிதையை எழுதியவர் என ஒருவரின் பெயரைக் குறிப் பிட்டிருந்தார். ஆனால், டாக்டர் ஜக்பிர் ரதீ என்பவர் அந்தக் கவிதையை 2006-ம் ஆண்டு தான் எழுதியதாகக் கூறி, தவறாக குறிப் பிட்டமைக்காக ரூ. 1 கோடி இழப்பீடு கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அந்த நோட்டீஸுக்கு 15 நாட் களுக்குள் பதிலளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இதுதொடர்பாக அமிதாப் பச்சனை கடந்த ஓராண்டாக ஃபேஸ்புக், ட்விட்டர் கணக்குகள் வழியாக தொடர்பு கொள்ள முயன்றதாகவும், ஆனால் அனைத்து முயற்சிகளும் வீணாகி விட்டதாகவும்” டாக்டர் ரதீ தெரிவித்துள்ளார்.