வாரணாசி தேர்தல் அதிகாரி மீது பாஜக புகார்

வாரணாசி தேர்தல் அதிகாரி மீது பாஜக புகார்
Updated on
1 min read

வாரணாசி மக்களவைத் தொகுதியில் பாஜக பிரச்சாரத்தை மாற்று இடத்தில் நடத்த கோரி, தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. இந்த நிலையில் தேர்தல் அதிகாரியை திரும்பப்பெற வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளது.

வாரணாசியில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் அருண் ஜெட்லி, வாரணாசி தொகுதியில் மோடியின் பொதுக் கூட்டம் மற்றும் பேரணிகளுக்கு தேர்தல் அதிகாரி தொடர்ந்து தடை விதித்து வருவதாக தெரிவித்தார்.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு ஏற்கனவே கடிதம் எழுதியிருந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் அதற்கான பதிலும் அளிக்கவில்லை. இந்நிலையில் வாரணாசியில் மோடியின் இன்றைய கூட்டத்திற்கும் தேர்தல் அதிகாரி அனுமதி அளிக்காதது கண்டனத்திற்கு உரியது என்ற அருண் ஜெட்லி, இதுகுறித்து மீண்டும் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருப்பதாக தெரிவித்தார்.

மேலும், வாரணாசி தொகுதி தேர்தல் அதிகாரியை உடனடியாக திரும்பப்பெறாவிட்டால், போராட்டம் நடத்தப்படும் என்றும் கடிதத்தில் ஜெட்லி எச்சரித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in