Published : 18 May 2015 08:43 AM
Last Updated : 18 May 2015 08:43 AM

ஜார்க்கண்ட் முதல்வரை சந்தித்து தனது திருமணத்தை நிறுத்திய மாணவி

ஜார்க்கண்ட் மாநிலத்தில், திரு மணம் செய்துகொள்ள விரும்பாத 17 வயது பாலிடெக்னிக் மாணவி ஒருவர், முதல்வர் ரகுவர் தாஸை நேற்று முன்தினம் சந்தித்து, தனது திருமண ஏற்பாடுகளை நிறுத் தினார்.

கொடர்மா மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணி யாற்றும் கைலாஷ் குமார் பண்டிட் என்பவரின் மகள் டாலி குமாரி. இந்நிலையில் முதல்வர் ரகுவர் தாஸ் நேற்று முன்தினம் தனது வீட்டில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டபோது, டாலி குமாரியும் அவரை சந்தித்தார். அப் போது தனது விருப்பத்தை மீறி பெற்றோர் திருமண ஏற்பாடு கள் செய்வதாகவும் தான் படிக்க விரும்புவதாகவும் அவரிடம் முறையிட்டார். மேலும் “எனது தந்தையிடம் நீங்கள் பேச வேண்டும்” என்றும் முதல்வரை அவர் கேட்டுக்கொண்டார்.

அம்மாணவியின் உறுதியை பாராட்டிய ரகுவர் தாஸ், உடனே அவரது தந்தை கைலாஷ் குமாரை தொலைபேசியில் அழைத்து, டாலியின் திருமண ஏற்பாடுகளை தற்போதைக்கு நிறுத்தி வைக் கும்படி கேட்டுக்கொண்டார்.

இதுபற்றி கைலாஷ் குமார் கூறும்போது, “முதல்வரிடமிருந்து அழைப்பு வந்ததும் அதிர்ச்சி அடைந்தேன். பிறகு எனது மகள் முதல்வரை சந்திப்பதை டி.வி.யில் பார்த்து நடந்த விவரம் அறிந்தேன். எனது மகள் தொடர்ந்து படிக்க ஆசைப்படுவது எனக்குத் தெரியும். ஆனால் பொருளாதார சூழல் இதற்கு தடையாக உள்ளது. நான் 7 குழந்தைகளுக்கு தந்தை. எனது 5 மகள்களில் 3 பேருக்கு திரு மணம் முடித்துவிட்டேன். இன்னும் 2 மகள்களுக்கு முடிக்க வேண்டும். அடுத்த ஆண்டு பணி ஓய்வு பெறுவதால் டாலிக்கு திருமண ஏற்பாடுகள் செய்தேன்” என்றார்.

இதனிடையே அக்குடும்பத் துக்கு உதவி செய்வதாக உறுதி யளித்த முதல்வர் ரகுவர் தாஸ், அதிகாரி ஒருவரை அழைத்து, அம்மாணவியின் படிப்பு தடைபடாமல் இருப்பதை உறுதிப் படுத்துமாறு உத்தரவிட்டார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் கும்லா மாவட்டத்தைச் சேர்ந்த பிர்சா முனி குமாரி என்ற 13 வயது மாணவி இதற்கு முன் மாவட்ட நிர்வாகத்தை சந்தித்து தனது திரு மண ஏற்பாடுகளை நிறுத்தி னார். “இந்த சம்பவமே முதல்வரை சந்திக்க என்னை ஊக்கப்படுத் தியது” என்று டாலி குமாரி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x