

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி 2006-ல் கிரிக்கெட்டுக்கு அளித்த சிறப்பான பங்களிப்பை பாராட்டி அவருடைய சொந்த மாநிலமான ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள ஹர்மு குடியிருப்பு பகுதியில் மாநில அரசின் சார்பில் நிலம் வழங்கப்பட்டது.
இதன்பிறகு அந்த இடத்துக்கு அருகில் 4,700 சதுர அடி கொண்ட மற்றொரு நிலமும் தோனிக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அது சட்டத்துக்கு புறம்பாக ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து முறைகேடாக உங்களுக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதை ஏன் ரத்து செய்யக்கூடாது எனக் கேட்டு தோனிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது ஜார்க்கண்ட் மாநில வீட்டு வசதி வாரியம்.
எனினும் ஜார்க்கண்ட் மாநில வீட்டு வசதி வாரியத் துறை நிர்வாக இயக்குநர் திலிப் குமார் இது தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.