

கேரளத்தில் கல்லூரி பேராசிரியர் ஒருவரின் கை வெட்டப்பட்டது தொடர்பான வழக்கில் குற்றம்சாட் டப்பட்ட 13 பேரும் குற்றவாளிகள் என தேசிய புலனாய்வு அமைப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.
இந்த வழக்கிலிருந்து 18 பேர் விடுதலை செய்யப்பட்டனர். குற்ற வாளிகளாக அறிவிக்கப்பட்ட வர்களுக்கு தண்டனை விவரம் மே 5 ம் தேதி அறிவிக்கப்படுகிறது.
தொடுபுழாவில் உள்ள கல்லூரி ஒன்றில் மலையாள மொழி பேராசிரியராக பணியாற்றிய ஜோசப், கல்லூரிக்கான தேர்வு வினாத்தாளில் முகம்மது நபிகள் பற்றி அவதூறான கருத்து தெரி வித்திருந்ததாக கூறப்படுகிறது. அதனால் ஆத்திரமுற்ற பாப்புலர் பிரண்ட்ஆப் இந்தியா ஆதரவாளர் கள் 2010 ஜூலை 4-ம் தேதி பேராசிரியர் ஜோசப்பின் வலது கையை வெட்டினர்.
எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள மூவட்டுப்புழாவில் தனது வீட்டின்அருகே ஞாயிறு ஆராதனை முடித்து குடும்பத்தினருடன் திரும்பியபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.
இது தொடர்பாக 31 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய நபர் உட்பட 5 பேர் பிடிபடாமல் உள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்த எர்ணாகுளத்தில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. அதன் படி 13 பேர் குற்றவாளிகளாக அறி விக்கப்பட்டனர். அவர்களுக்கான தண்டனை விவரம் மே 5-ம் தேதி அறிவிக்கப்படுகிறது. 18 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
மன்னித்துவிட்டேன்
இதுகுறித்து ஜோசப் கூறியதா வது: எனக்கு பாதகம் செய்தவர் களை நான் மன்னித்துவிட்டேன். அவர்கள் மீது எனக்கு விரோத உணர்வு இல்லை. மாநில அரசிடம் இருந்து நீதி கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருக்கிறேன். எனது சிகிச்சை செலவுகளை அரசு ஏற்றுக் கொண்டுவிட்டது. இதுவரை ரூ. 4 லட்சம் கொடுத்துள்ளது. எனக்கு ஏற்பட்ட செலவு ரூ. 20 லட்சம். மேலும் எனக்கு ஓய்வூதி யம் கிடைக்கவில்லை. முழுமை யான ஊதியமும் இன்னும் கிடைக்க வில்லை என்றார் ஜோசப்.