

தமிழக முதல்வராக மீண்டும் பதவியேற்றுள்ள நிலையில், ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது குறித்து சட்டத் துறையின் அறிக்கை கிடைத்த பிறகு முடிவு எடுக்கப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சித்தராமையா நேற்று சந்தித்தார். அப்போது ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் செய்தியாளர்களிடம் சித்தராமையா கூறியதாவது:
சொத்துக் குவிப்பு வழக்கு மேல் முறையீட்டிலிருந்து ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எங்கள் மாநில சட்டத் துறையினர் ஆராய்ந்து வருகின்றனர். அவர்களிடமிருந்து அறிக்கை கிடைத்த பிறகு, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும். இந்த விவகாரம் தொடர்பாக கட்சித் தலை மையுடன் எதுவும் பேசவில்லை. இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.