Published : 18 May 2014 03:10 PM
Last Updated : 18 May 2014 03:10 PM

கர்நாடகாவில் 5 தமிழர்களும் படுதோல்வி: ஒற்றுமை இல்லாததே காரணம் என தமிழ் அமைப்புகள் கருத்து

மக்களவைத் தேர்தலில் கர்நாடக மாநில‌த்தில் பல்வேறு கட்சிகளின் சார்பாக போட்டியிட்ட 5 தமிழர்களும் தோல்வியை தழுவியுள்ளனர். தமிழர்களிடையே ஒற்றுமையும், அரசியல் ரீதியான விழிப்புணர்வும் இல்லாததே தோல்விக்கு காரணம் என தமிழ் அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளன.

கர்நாடக மாநில‌த்தில் உள்ள‌ 28 மக்களவைத் தொகுதிகளில், மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பாக பெங்களூர் தெற்கு தொகுதியில் ரூத் மனோரமாவும், ஆம் ஆத்மி கட்சி சார்பாக பெங்களூர் மத்திய தொகுதியில் இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் நிதி அதிகாரி பாலகிருஷ்ணனும், பகுஜன் சமாஜ் கட்சி சார்பாக பெங்களூர் வடக்கு தொகுதியில் வேலுவும் போட்டியிட்டனர்.

இதுதவிர உடுப்பி-சிக்மகளூர் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக விஜயகுமாரும், கோலார் தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் சார்பாக வள்ளல் முனு சாமியும் போட்டியிட்ட‌னர். இவர் கள் 5 பேரும் தமிழர்கள் ஆவர்.

மிகக் குறைவான‌ வாக்குகள்

இதில், பாலகிருஷ்ணன் 39,869 வாக்குகளும், ரூத் மனோரமா 25,248 வாக்குகளும், விஜயகுமார் 9,691 வாக்குகளும், வேலு 5,586 வாக்குகளும், வள்ளல் முனுசாமி 4,803 வாக்குகளும் பெற்று தோல்வியடைந்தனர்.

ஒற்றுமையின்மையே காரணம்

கர்நாடகாவில் கிட்டத்தட்ட ஒரு கோடி தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். இருப்பினும் காங்கிரஸ், பா.ஜ.க. போன்ற பெரிய கட்சிகள் சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தலில் தமிழர்களுக்கு வாய்ப்பு வழங்குவதில்லை.

இந்நிலையில், இந்த தேர்தலில் 5 வேட்பாளர்கள் களமிறங்கியும் ஒருவர் கூட வெற்றி பெறாதது கர்நாடக தமிழர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, சில தமிழ் அமைப்புகளிடம் பேசிய போது, ''தமிழர்கள் வேட்பாளர்களாக களமிறங்கிய இந்த தொகுதிகளில் தலா 5 லட்சத்திற்கும் அதிகமான தமிழ் வாக்காளர்கள் வாழ்கிறார்கள். இவர்கள் மட்டும் வாக்களித்திருந்தாலே 5 வேட்பாளர்களும் அமோகமாக வெற்றி பெற்றிருப்பார்கள். ஆனால் அனைவரும் படுதோல்வி அடைந்திருப்பது, கர்நாடக தமிழர்கள் ஒற்றுமையின்றி பல்வேறு குழுக்களாக சிதறுண்டு கிடப்பதையே காட்டுகிறது.

பெங்களூரில் உள்ள 4 மக்களவைத் தொகுதிகளிலும் போட்டியிட்ட காங்கிரஸ், பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தது, போஸ்டர் ஒட்டியது அனைத்துமே தமிழர்கள் தான். இது தவிர, மற்ற வேட்பாளர்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு தமிழர்களுக்கு எதிராகவே வேலைப் பார்த்த கொடுமையையும் காண முடிந்தது.

விழிப்புணர்வு அவசியம்

கர்நாடக தமிழர்கள் அரசியல் ரீதியாக போதிய‌ விழிப்புணர்வு பெற வேண்டும். எந்த கட்சி வெற்றிப்பெற்றால் தமிழர்கள் பாதுகாப்புடன் வாழ முடியும், எந்த வேட்பாளர் தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பார் என்பதை ஆராய்ந்து வாக்களிக்க வேண்டும்.

இதுதவிர, காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய பெரிய கட்சிகளும் தமிழர்களை வேட்பாளர்களாக நிறுத்த முன்வர வேண்டும். அந்த கட்சிகளின் சார்பாக தமிழர்கள் போட்டியிட்டல், பாராளுன்றத் திலே, சட்டமன்றத்திலோ நிச்சயம் கர்நாடகத் தமிழர்களின் குரல் ஓங்கி ஒலிக்கும்''என்றார்.

அதே நேரத்தில் தமிழர் கள் வேட்பாளர்களாக அறி விக்கப்பட்டதால், அவர்களுக்கு அந்தந்த கட்சியைச் சேர்ந்த தொண்டர்களே வாக்களித் தார்களா என்பதும் கேள்விக்குறி யாக உள்ளது.

இருப்பினும், இதுபோன்ற தேர்தல்களில் தமிழர்கள் தங்களின் அரசியல் எழுச்சியை காட்டினால் தான் கர்நாடகாவில் தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ முடியும்'' என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x