

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் இருந்து வலுகட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.
இன்று காலை சட்டப்பேரவை கூடியதும், காஷ்மீர் வெள்ள நிவாரணப் பணிகள் உட்பட பல்வேறு விவகாரங்களை முன்வைத்து தேசிய மாநாட்டு கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக அரசு உடனடியாக பதில் அளிக்க வேண்டும் என கூறி அவர்கள் கோஷமிட்டனர். இதனால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
தொடர்ந்து கூச்சல் குழப்பம் நிலவியதால், அமளியில் ஈடுபடும் உறுப்பினர்கள் அனைவரும் தகுதி நீக்கம் செய்யப்படுவர் என சபாநாயகர் எச்சரிக்கை விடுத்தார். இருப்பினும் அவையில் தேசிய மாநாட்டுக் கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து தேசிய மாநாட்டுக் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கூண்டோடு அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.