குருவாயூர் கிருஷ்ணன் கோயிலில் இலங்கை பிரதமர் ரணில் வழிபாடு

குருவாயூர் கிருஷ்ணன் கோயிலில் இலங்கை பிரதமர் ரணில் வழிபாடு
Updated on
1 min read

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நேற்று குருவாயூர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

கேரள மாநிலம் குருவாயூரில் புகழ்பெற்ற கிருஷ்ணன் கோயி லுக்கு நேற்று காலை 11.15 மணிக்கு இலங்கை பிரதமர் ரணில் தனது மனைவி மைத்ரியுடன் வந்தார். மேலும், இதை முன்னிட்டு குருவாயூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கோயிலுக்கு வந்த ரணில் சுவாமி தரிசனம் செய்தார். மேலும் கோயி லில் எடைக்கு எடை சந்தனக் கட்டைகளை துலாபாரம் வழங்கி னார். மொத்தம் ரூ.8.45 லட்சம் மதிப்புள்ள 77 கிலோ சந்தனக் கட்டைகள் துலாபாரமாக வழங்கப் பட்டன. ரணில் தம்பதியினருக்கு குருவாயூர் கோயில் மேல்சாந்தி ஸ்ரீஹரி நம்பூதிரி கோயில் பிரசாதம் வழங்கினார். நெய் விளக்கு, வாழைப்பழங்களை காணிக்கையாக அளித்தார் ரணில்.

தரிசனம் முடித்த பின் செய்தி யாளர்களிடம் ரணில் கூறும்போது, ‘‘நான் இந்தியாவுக்கு எதிரான அல்லது சீனாவுக்கு ஆதரவானவனோ இல்லை. ஆனால், பிரதமர் என்ற முறையில் இலங்கையின் நலனைக் காக்க வேண்டியது என்னுடைய கடமை’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in