

சனிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பிஹாரில் அதிகபட்சமாக 51 பேர் பலியாகினர். இந்நிலையில் பிஹாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு, நிவாரணப் பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்வதற்காக மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா, அனந்த குமார் ஆகியோர் இன்று அங்கு செல்கின்றனர். குறிப்பாக பிஹாரின் வடக்கு பகுதிகளுக்கு அமைச்சர்கள் செல்கின்றனர்.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வை முடித்துக் கொண்டு அமைச்சர்கள் இருவரும் பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரை சந்தித்து ஆலோசிக்க இருக்கின்றனர். பின்னர் பிஹார் நிலவரம் குறித்து பிரதமரிடம் அறிக்கை தாக்கல் செய்கின்றனர்.
கடந்த 25-ம் தேதி சனிக்கிழமை நேபாளத்தில் ரிக்டரில் 7.9 என்ற அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் பாதிப்பு இந்தியாவிலும் இருந்தது. இந்தியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 71 பேர் பலியாகினார். அதிகபட்சமாக பிஹாரில் 51 பேர் பலியாகினர்.