

வாக்கு எண்ணிக்கையின்போது, குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் எந்தக் கட்சிக்கு அதிக வாக்கு கள் விழுந்தன என்பது வெளிப் படையாகத் தெரியாமல் இருப் பதற்காக புதிய இயந்திரத்தைப் பயன்படுத்த தேர்தல் ஆணையம் யோசனை தெரிவித்துள்ளது.
தற்போது, வாக்கு எண்ணிக் கையின்போது குறிப்பிட்ட வாக்குச் சாவடியில் எந்தக் கட்சிக்கு அதிக வாக்குகள் விழுந்தது என்பதைக் கண்டறிய முடியும். இதைத் தவிர்க்க ‘டோட்டலைசர்’ எனும் கருவியைப் பயன்படுத்து வது குறித்த பரிந்துரையுடன் சட்ட அமைச்சகத்தை தேர்தல் ஆணை யம் அணுகியுள்ளது. இக்கருவி யைப் பயன்படுத்தி வாக்கு எண் ணும்போது, பல்வேறு வாக்குச் சாவடிகளின் வாக்குகளும் கலந்து, இறுதி எண்ணிக்கை மட்டும் தெரியவரும். இதனால், குறிப்பட்ட பகுதியில் குறிப்பிட்ட கட்சிக்கு அதிக வாக்குகள் விழுந்ததா என்பது ரகசியமாகவே இருக்கும்.
தேர்தல் ஆணையத்துக்கான நிர்வாக அமைச்சகம் சட்ட அமைச்சகம் ஆகும். ஆனால், இதுதொடர்பான முடிவை அரசுதான் எடுக்க வேண்டும்.
தேர்தல் சீர்திருத்தம் தொடர் பாக அரசுக்கு அறிக்கை அளித்த சட்ட ஆணையம் ‘டோட்டலைசர்’ கருவி பயன்படுத்துவதற்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு குறிப்பிட்ட பகுதி வாக்காளர்கள் மீது பாரபட்சம் காட்டகூடாது என்பதற்காக இம்முறையை அமல்படுத்த தேர்தல் ஆணையம் யோசிக்கிறது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன், வாக்குச்சீட்டுகள் ஒன்றாக கலக்கி பிறகு எண்ணப்பட்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.