Published : 16 Apr 2015 08:28 AM
Last Updated : 16 Apr 2015 08:28 AM

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

பெட்ரோல், டீசல் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இந்த விலைக்குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம்:

பெட்ரோல் விலை லிட்டருக்கு 80 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. டீசல் விலை லிட்டருக்கு ரூ. 1.30 குறைக்கப்பட்டுள்ளது.

விலை குறைப்புக்குப் பிறகு தலைநகர் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 59.20 ஆக இருக்கும். டீசல் ஒரு லிட்டர் ரூ. 47.20-க்கு விற்பனை செய்யப்படும்.

தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் அந்தந்த மாநில வரி விதிப்புகளுக்கு ஏற்ப விற்பனை விலை இருக்கும்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவது மற்றும் டாலருக்கு நிகரான ரூபாயின் ஸ்திரத்தன்மை அடிப் படையில் விலை குறையும் போது அதன் பலன் நுகர் வோரையும் சென்றடையும் வகையில் விலை குறைப்பு நடவடிக்கை எடுக்கப்படுவதாக இந்தியன் ஆயில் கார்ப்ப ரேஷன் (ஐஓசி) தெரிவித் துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x