

ஆந்திராவில் என்கவுன்ட்டரில் உயிரிழந்த 6 பேரின் மறு பிரேதப் பரிசோதனை அறிக்கை நேற்று ஆந்திர உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தடய வியல் அறிக்கையை வெள்ளிக் கிழமை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பதி சேஷாசலம் வனப் பகுதியில் கடந்த 7-ம் தேதி திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 20 தொழிலாளர்கள் ஆந்திர அதிரடி போலீஸாரால் என்கவுன்ட்டரில் கொல்லப் பட்டனர்.
இந்த சம்பவத்தில் இறந்த சசிகுமார், முனுசாமி, பெருமாள், மகேந்திரன், முருகன், மூர்த்தி ஆகியோரின் சடலங்களில் மர்ம காயம் உள்ளதால், மறு பிரேதப் பரிசோதனைக்கு உத்தரவிடக் கோரி இவர்களது குடும்பத்தினர் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இதை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், உடனடியாக மறு பிரேதப் பரிசோதனைக்கு உத்தர விட்டது.
அதன்பேரில், ஹைதரா பாத்தில் உள்ள உஸ்மானியா, காந்தி, நிஜாம் ஆகிய மருத்துவக் கல்லூரிகளின் பேராசிரியர்கள் திருவண்ணாமலை மருத்துவ மனையில் மறு பிரேதப் பரி சோதனை நடத்தினர்.
இந்நிலையில், 6 பேரின் மறு பிரேதப் பரிசோதனை அறிக் கையை ஆந்திர அரசு நீதிமன்றத் தில் நேற்று சமர்ப்பித்தது. இதைப் பெற்றுக் கொண்ட நீதிபதிகள், வெள்ளிக்கிழமை தடயவியல் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.