

ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகர் பகுதிக்குள் சிமி தீவிர வாதிகள் ஊடுருவி இருக்கலாம் என மத்திய உள்துறை அமைச் சகம் எச்சரித்ததால், புகழ்பெற்ற விஜயவாடா கனக துர்கையம்மன் கோயிலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.
மத்தியப் பிரதேச மாநிலம், காண்ட்வா சிறைச்சாலையில் இருந்து சிமி அமைப்பைச் சேர்ந்த ஃபைசல் உட்பட 6 தீவிரவாதிகள் தப்பித்தனர். இந்நிலையில் தெலங் கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் அஸ்லாம், இசாஜ் அகமது ஆகிய 2 தீவிரவாதிகளை என்கவுன்ட்டர் மூலம் போலீஸார் சுட்டுக் கொன்றனர். இவர்கள் மத்தியப் பிரதேச சிறையிலிருந்து தப்பியவர்கள் என தெரியவந்துள்ளது.
தீவிரவாதிகளுடனான மோதலில் 4 போலீஸார் பலியா யினர். இதனால் தற்போது தெலங்கானா மாநிலத்தில் பாது காப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. கொல்லப்பட்ட தீவிரவாதிகளிட மிருந்து ரயில் டிக்கெட் ஒன்றை போலீஸார் கைப்பற்றி உள்ளனர்.
இதனால் மற்ற நான்கு தீவிர வாதிகளும் விஜயவாடாவில் தங்கி இருக்கலாம் என உளவு துறையினரின் ரகசிய விசா ரணையில் தெரியவந் துள்ளது. ஆதலால், இவர்கள் திருப்பதிக்கு அடுத்தபடியாக பக்தர்கள் அதிகமாக வரும் விஜய வாடா கனக துர்கையம்மன் கோயிலில் நாச வேலையில் ஈடுபடலாம் என்றும் எச்சரித்து உள்ளனர்.
இதனால் இந்தக் கோயிலில் தற்போது ஆயுதப்படை போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பக்தரும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அம்மனை தரிசிக்க அனுமதிக் கப்படுகின்றனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தேவஸ்தான அதிகாரிகள், போலீஸ் துறையினர் ஆந்திர அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். மேலும் விஜய வாடாவில் உள்ள ரயில் நிலையம், பஸ் நிலையங்களிலும், மற்ற கோயில்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.