

மகாராஷ்டிர மாநிலத்தின் 3 மாவட்டங்களில் கடந்த 10 மாதங்களில் ஊட்டச்சத்துக் குறைபாடுகள் காரணமாக 1,274 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
நந்தர்பர் மாவட்டத்தில் 662, பால்காரில் 418, தானேயில் 194 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுகள் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
மகளிர் மற்றும் குழந்தைகள் நல மாநில அமைச்சர் வித்யா தாக்கூர் இத்தகவல்களை மாநில கவுன்சிலில் தெரிவித்தார்.
தானே மாவட்டத்தின் பிவாண்டி பகுதியில் சராசரி எடைக்கும் கீழ் உள்ள குழ்ந்தைகளின் எண்ணிக்கை 2013-ம் ஆண்டு 286-ஆக இருந்த்து. 2014-ல் இது 497-ஆக அதிகரித்தது.
இதுகுறித்து மகாராஷ்டிர அரசு நடவடிக்கை மேற்கொண்டும் ஊட்டச்சத்து குறைபாடுகளினால் ஏற்படும் குழந்தை மரணங்களை தடுக்க முடியவில்லை என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
பழங்குடியினர் பகுதிகளிலும் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு விவகாரம் அதிகரித்து கொண்டே வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்