விவசாயிகளுக்கு தனி வங்கி தொடங்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை

விவசாயிகளுக்கு தனி வங்கி தொடங்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை
Updated on
2 min read

நாட்டில் விவசாயம் லாபகரமாக இல்லாததால் விவசாயிகள் நொடிந்துபோய் கடனாளிகளாக உள்ளனர். அவர்கள் வாங்கிய விவசாயக் கடன்களை அரசு தள்ளு படி செய்யவேண்டும் என்று எதிர்க் கட்சிகள் மாநிலங்களவையில் கோரிக்கை விடுத்தன. விவசாயிகளுக்கென தனியாக வங்கி தொடங்க வேண்டும் என்றும் அவை வேண்டுகோள் வைத்தன.

அவையில் ஐக்கிய ஜனதா தளம் உறுப்பினர் ஒருவர் நேற்று பேசியதாவது: பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு பெரும்கட்சிகளும் ஒன்றுசேர்ந்து விவசாயிகளுக்கு ஆதரவுக் கரம் நீட்ட வகை செய்யும் எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைகளை அமல் படுத்த முன்வர வேண்டும். காப்பீட் டுத்துறையில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதை சாதித்தபோது இதையும் செய்யலாம் என்றார்.

டெல்லியில் சில தினங்களுக்கு முன் ஆம் ஆத்மி கட்சி நடத்திய பேரணியில் விவசாயி ஒருவர் மரத்தில் ஏறி தற்கொலைசெய்து கொண்ட விவகாரம் பற்றியும் விவ சாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினை கள் பற்றியும் விவாதம் நடந்தபோது சமாஜ்வாதி உறுப்பினர் நரேஷ் அகர்வால் பேசினார். அவர் கூறிய தாவது: வானிலை மாறுபாடுகளால் விவசாயிகள் கடுமையாக பாதிக் கப்படுகின்றனர். அவர்களுக்கு அரசு தாராள மனம்காட்டி உதவிட வேண்டும். பயிர் காப்பீடு மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பாக இருக்கவேண்டும், விவசாயிகளிடம் இருந்து வாங்கும் உணவு தானியங் களின் தரத்தைப்பற்றி பொருட்படுத் தாமல் இந்திய உணவுக்கழகம் கொள்முதல் செய்ய வேண்டும்.

கடன் தள்ளுபடி என்பது விவசாயிகளுக்கு காட்டும் பரிவு அல்ல. முன்பு தேர்தலை மனதில் கொண்டு கடன் தள்ளுபடி செய் யப்பட்டது. இப்போது அவர்களின் நிலைமையை கருத்தில்கொண்டு தள்ளுபடிசெய்யலாம்.

மொத்த வாராக்கடன் 2 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக உயர விவசாயிகள் காரணம் அல்ல, தொழிலதிபர்கள்தான் காரணம்.

மகளிர் வங்கி ஏற்படுத்தியது போல், விவசாயிகளுக்கு என தனி யாக வங்கி ஏற்படுத்தி அவர்களுக்கு ஒரு சதவீத வட்டியில் கடன் தரலாம். விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வு காண்பது அவசியம். இந்த விவகாரம் பற்றி நடக்கும் விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி பதிலளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஐக்கிய ஜனதா தளம் கட்சி உறுப்பினர் தியாகி பேசியதாவது:

டெல்லியில் நடந்த ஆம் ஆத்மி பேரணியில் நாட்டில் உள்ள விவசாயிகளின் பிரச்சினைக்காக தனது உயிரை தியாகம் செய்துள் ளார் கஜேந்திர சிங். விவசாயிகளின் தற்போதைய இன்னல்களுக்கு பல்வேறு அமைச்சகங்களும் பொறுப்பாகும்.

காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டை அனுமதிக்க கரம் கோத்த பாஜகவும் காங்கிரஸும் விவசாயிகளின் நிலைமை பற்றி ஆராய அமைக்கப்பட்ட எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்தவும் ஒன்றுசேரலாம்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர் கள், தனியார் துறையில் உள்ளவர் களுக்கு ஊதியம் பலமடங்கு உயர்ந்துள்ளது ஆனால் விவசாயி களுக்கோ லாபம் உயரவில்லை. கடனாளிகளாக மாறியுள்ள விவசா யிகள் பற்றி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை கூட்டி தீர்வு காண வேண்டும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in