நில மசோதா விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக சதி: எதிர்க்கட்சிகள் மீது கட்கரி குற்றச்சாட்டு

நில மசோதா விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக சதி: எதிர்க்கட்சிகள் மீது கட்கரி குற்றச்சாட்டு
Updated on
1 min read

நிலம் கையகப்படுத்துதல் மசோதா விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக அரசியல் சதி செய்வதாக எதிர்க்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் நிதின் கட்கரி குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய நிதின் கட்கரி கூறியதாவது:

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசு விவசாயி கள், தலித்துகளுக்கு எதிரானது என்ற தவறான தோற்றத்தை பொது மக்கள் மத்தியில் ஏற்படுத்துகிறார் கள். மேலும் கார்ப்பரேட் நிறு வனங்கள், தொழிலதிபர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் எதிர்க்கட்சியினர் பொய்ப் பிரச்சாரம் செய்கிறார்கள்.

இது மத்திய அரசுக்கு எதிரான அரசியல் சதியாகும். இந்த சதி தொடர்ந்து நடைபெறுகிறது. பாஜக அரசு மீது குத்தப்படும் இந்த முத்திரை தவறானதாகும்.

இதைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு பொதுமக்கள் பக்குவம் அடைந்துள்ளனர். மக்களவை பொதுத்தேர்தலில் பாஜகவை வெற்றிபெறச் செய்ததிலிருந்தே இதைப் புரிந்து கொள்ளலாம்.

நாட்டின் வளர்ச்சிக்கு குந்தகம் ஏற்படுத்த சில அரசியல்வாதிகள் மக்கள் மனதில் குழப்பத்தை விதைக்கிறார்கள். நிலம் கையகப் படுத்துதல் மசோதாவில் 5 திருத் தங்கள் செய்யப்பட்டுள்ளன. அவற் றில் ஒன்றுகூட விவசாயிகளுக்கு எதிரானது இல்லை. இவ்வாறு கட்கரி தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in